இந்திய எல்லையில் ட்ரோன் ஊடுருவல்... 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
எல்லை கட்டுப்பாட்டு பகுதியருகே ட்ரோன் ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மார்ச் 3ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்கள் திரண்டு சாலைகளில் கண்டன பேரணி நடத்தினர். இதனால் சில இடங்களில் பதற்றம் நிலவியது. பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை பலப்படுத்தினர்.
இந்நிலையில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ட்ரோன் ஊடுருவல் முயற்சிகள் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதியில் ஏற்கனவே நிலவி வந்த பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு வலுவூட்டப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!