உலகக் கோப்பை குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற பெண்கள் 51 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில், இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் நிகாத் ஜரீன், உஸ்பெகிஸ்தானின் குல்செவார கானிவாவை 5–0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்திய அணியில் உற்சாகம் நிலவுகிறது.
20 மாதங்களுக்கு பிறகு பதக்க மேடையை எட்டுவதில் மகிழ்ச்சி அடைவதாக நிகாத் ஜரீன் போட்டிக்குப் பின்பு தெரிவித்தார்.
இதேபோல் ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), ஜதுமணி சிங் (50 கிலோ), பவான் பார்த்வால் (55 கிலோ), சச்சின் சிவாச் (60 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ) ஆகியோரும் தங்களது பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.இன்றைய போட்டிகளில் மொத்தம் 15 இந்திய வீரர்கள் தங்கப் பதக்கத்திற்காக களம் இறங்க உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!