கனடாவில் இந்திய வம்சாவளி பெண் கொலை… காதலன் தலைமறைவு!
கனடாவின் டொரோண்டோ மாகாணம் மேற்கு வெல்லிங்டன் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளம்பெண் ஹிமன்ஷி ஹரனா (30) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமன்ஷியும் அப்துல் ஹபாரி (32) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஹிமன்ஷியை அப்துல் கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே ஹிமன்ஷி காணாமல் போனதாக அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தேடுதல் நடத்திய போலீசார், மறுநாள் காலை வீட்டில் ஹிமன்ஷியின் சடலத்தை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காதலியை கொலை செய்துவிட்டு தலைமறைவான அப்துல் ஹபாரியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!