இந்திய இளைஞர் கனடா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு!
கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட 37 வயது சந்தன் குமார் ராஜா நந்தகுமார் கனடாவின் ப்ராம்ப்டன் பகுதியில் ஐ.டி. துறை ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை (பிப். 7) பகல் 3.30 மணியளவில் டொரோண்டோ அருகே ரெக்ஸ்டேல் பௌல்வார்ட், வுட்பின் ஷாப்பிங் சென்டரில் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் அவரை சுட்டு, சம்பவ இடத்திலிருந்து புறப்பாடு ஆனார்.
சம்பவத்தை அறிந்து காவல் துறை அதிகாரிகள் சென்று காயமடைந்து மயங்கியிருந்த நந்தகுமாரை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளியை பிடிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வெளிநாடுகளில் துப்பாக்கிக்கலாசாரம் பரவலாக இருக்கும் நிகழ்வுகளையும், வெளிநாடுவாழ் இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதை காட்டுகிறது. கர்நாடக இளைஞரின் மரணம் கனடாவில் உள்ள இந்திய சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!