இந்தியர்கள்  ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை...  அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்!

 

உலக சுகாதார தினமான இன்று, இந்தியர்களின் ஆரோக்கியம் குறித்த ஒரு முக்கிய ஆய்வு அறிக்கை வெளியாகி மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ நகரங்கள் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 5,000 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 90 சதவீதம் பேர் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, இந்தியர்கள் தங்களின் அன்றாட வீட்டு வேலைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், உடற்பயிற்சி மற்றும் தூக்கம் போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் புறக்கணிப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் தங்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் ஒதுக்கி விடுவதாக சுமார் 42.5 சதவீத இந்தியர்கள் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எது நல்லது என்று தெரிந்தும், அதனைச் சரியாகப் பின்பற்றுவதில் 57.8 சதவீதத்தினர் தோல்வி அடைவதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 46 சதவீதத்தினர் உடல்நலத்தைப் பேண அவ்வப்போது முயற்சிகளை மேற்கொண்டாலும், அதனைத் தொடர்ந்து செய்ய முடியாமல் பாதியிலேயே விட்டுவிடுவதால் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி வருவதாக அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியர்களிடம் நிலவும் இந்தப் பிரச்சனை விழிப்புணர்வு சார்ந்தது அல்ல, மாறாகப் பழக்கவழக்கங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல் என்பது இந்த ஆய்வின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. வீட்டு வேலைகளில் மூழ்கிக் கிடப்பதால் தூக்கத்தில் சமரசம் செய்து கொள்வது எதிர்காலத்தில் பெரும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, தினசரி வாழ்வில் முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களை ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதே இந்தியர்களுக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய சவால் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!