தொடர் சரிவில் இண்டிகோ பங்கு… 2 நாளில் ரூ.16,000 கோடி ‘வெளியேறியது’!
இண்டிகோ விமான சேவை இன்னும் முழுமையாக சீராகாத நிலையில், அதன் தாக்கம் பங்குச் சந்தையிலும் தெளிவாகப் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. இன்று இண்டிகோ நிறுவனத்தின் பங்கு விலை ஒரே நாளில் 5 சதவீதம் சரிந்து, ரூ.295 குறைந்து ரூ.5,075-க்கு விற்பனையாகி வருகிறது. தொடர்ச்சியான விமான ரத்துகள் மற்றும் சேவை குழப்பங்கள் முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இண்டிகோ நிறுவனத்தின் பங்கு விலை மொத்தமாக 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.16,000 கோடி அளவிலான சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விமான சேவை துறையில் இண்டிகோ முக்கிய இடம் வகிப்பதால், இந்த வீழ்ச்சி பங்குச் சந்தை வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
டிசம்பர் 1-ம் தேதி ரூ.5,900 என்ற நிலையில் இருந்த இண்டிகோ நிறுவன பங்கு விலை, ஒரே வாரத்தில் ரூ.825 வரை சரிந்துள்ளது. விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை பங்கு விலையிலும் ஏற்றத் தாழ்வுகள் தொடரலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சேவை சீரடைந்தால் மட்டுமே முதலீட்டாளர்களின் நம்பிக்கை மீண்டும் திரும்பும் எனவும் கூறப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!