undefined

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... பெரும் பரபரப்பு! 

 

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம்த்தில் இருந்து மேகாலயாவின் ஷில்லாங்க் நகரத்துக்கு புறப்பட இருந்த IndiGo விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த நிலையில், விமானத்தின் கழிவறையில் ஒரு மிரட்டல் கடிதத்தை பணியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். அதில் விமானத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து பயணிகளும் அவசரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் முழுமையான சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது சந்தேகப்படும் எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படாததால், அது வெறும் புரளி மிரட்டல் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!