இந்தோனேசியா விமான விபத்து: மலைப்பகுதியில் சிதைவுகள் கண்டெடுப்பு... 11 பேரும் உயிரிழப்பு - மீட்பு பணிகள் தொய்வு!
இந்தோனேசிய கடல்சார் மற்றும் மீன்வளம் அமைச்சகத்தின் கண்காணிப்புப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ATR 42-500 (பதிவு எண்: PK-THT) ரக விமானம், நேற்று மதியம் 1:17 மணிக்குக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இன்று அதிகாலை 6:47 மணியளவில் வான்வழித் தேடுதல் குழுவினர் விமானத்தின் பாகங்களைக் கண்டறிந்துள்ளனர்.
விமானத்தின் வால் பகுதி மற்றும் உடல் பாகங்கள் செங்குத்தான மலைச் சரிவில் சிதறிக் கிடக்கின்றன. முதற்கட்ட தகவல்களின்படி, விமானத்தில் இருந்த 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இந்த விபத்தில் இந்தோனேசிய கடல்சார் அமைச்சகத்தைச் சேர்ந்த மூன்று உயர்மட்ட அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த இடம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,135 அடி உயரத்தில் உள்ள செங்குத்தான மலைப்பகுதியாகும். மீட்புக் குழுவினர் கயிறுகள் மற்றும் சிறப்பு மலை ஏறும் கருவிகளைப் பயன்படுத்தியே அந்த இடத்தை அடைய முடியும். அப்பகுதியில் நிலவும் அடர் மூடுபனி மற்றும் மேகமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியவில்லை. தரைவழி மீட்புக் குழுவினர் சுமார் 400 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகின்றனர்.
விமானம் மாயமான நேரத்தில் அந்தப் பகுதியில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், கரும்புகை எழுந்ததாகவும் உள்ளூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!