ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம்?! இனி பயனர்கள் காட்டில் மழை தான்!! 

 

ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். ஊழியர்கள் பணிநீக்கம், ஆட்குறைப்பு, ப்ளூடிக், ஆரஞ்சு டிக், மாத சந்தா, பெண் சிஇஓ எனப் பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை  வெளியிட்டு வருகிறார். தகவல் பரிமாற்ற செயல்களில் முண்ணனியில் இருந்து வரும் செயலிகள் ட்விட்டர், பேஸ்புக். இவைகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிறுவனங்களும் தொழில் நுப்ட அடிப்படையில் மேம்படுத்தும் வகையில் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அப்டேட் செய்து வருகின்றனர். இதனால் பயனர்கள் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.


ட்விட்டர் போன்று செய்திகளைப் பகிரும் புதிய தளத்தை உருவாக்க ஏதுவாக இன்ஸ்டாகிராம் புதிய தளத்தை தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த புதிய செயலி  ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய செயலி மூலம் பயனர்கள் 1,500 வார்த்தைகள் வரை டைப் செய்ய முடியும் எனவும்,  அத்துடன் லிங்குகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் மெட்டா நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை பயனர்களிடையே உருவாக்கியுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!