வெனிசுவேலாவுடன் இணைய அமெரிக்காவுக்கு இடைக்கால அதிபர் அழைப்பு!
வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ், அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் டெல்சி ரோட்ரிகஸை இடைக்கால அதிபராக நியமித்தது. இதையடுத்து அவர் அரசின் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
பின்னர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில், வெனிசுவேலா அமைதியான வாழ்க்கைக்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கும் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வெளிப்புற அச்சுறுத்தல்கள் இல்லாமல், மரியாதையுடன் உலக நாடுகளுடன் வாழ விரும்புகிறோம் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு நாட்டின் உள் அமைதியே உலக அமைதிக்கு அடிப்படை என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இறையாண்மை சமத்துவம் மற்றும் தலையீடு இல்லாத உறவுகளை அமெரிக்காவுடன் உருவாக்க விரும்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் பகிர்ந்த வளர்ச்சிக்கான ஒத்துழைப்புக்கு அமெரிக்க அரசு முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். போருக்கு அல்ல, அமைதி மற்றும் உரையாடலுக்கே எங்கள் மக்கள் தகுதியானவர்கள் என்றும், வெனிசுவேலாவுக்கு அமைதி, வளர்ச்சி மற்றும் எதிர்கால உரிமை உள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!