56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கோலாகல தொடக்கம்!
கோவா தலைநகர் பனாஜியில் இன்று 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இந்த விழா நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறும், இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.
தமிழகத்திலிருந்து இதில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, நடிகர் அப்புக் குட்டியின் ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ மற்றும் இ.வி.கணேஷ்பாபு இயக்கிய குறும்படம் ‘ஆநிரை’ ஆகியவை தேர்வாகி உள்ளன.
விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்படவிருப்பதுடன், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிக்கு சிறப்பு கவுரவம் வழங்கப்படவுள்ளது. அதோடு, மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சவுதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!