undefined

  56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா..  ‘அமரன்’ படத்திற்கு சிறப்பு கவுரவம்! 

 
 

இந்திய சர்வதேச திரைப்பட விழா, ஆண்டுதோறும் கோவாவில் நடைபெறும் மிகப்பெரிய திரைப்பட விழாவாகும். இதன் 56வது ஆண்டு விழா இன்று பனாஜியில் கோலாகலமாக தொடங்கியது. வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த வரிசையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சாய்பல்லவி நடிப்பில் உருவான ‘அமரன்’ திரைப்படம், ‘ஓபன் பீச்சர் ஃபிலிம்’ பிரிவில் திரையிடப்படுவதற்காக தேர்வு செய்யப்பட்டு பெருமை பெற்றுள்ளது. இதுகுறித்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.

மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்ட இந்த படத்திற்கு, இந்தாண்டு வழங்கப்படும் ‘கோல்டன் பீக்காக்’ விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால் திரைப்படத்துறையில் பெரும் கவனம் ஈர்த்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் விழாவில் கலந்துகொள்ள சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்கு புறப்பட்டார். அப்போது அவரை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!