16 வயதுக்குட்பட்டோருக்கு இணைய தடை? ஐகோர்ட் அதிரடி கருத்து!
ஆஸ்திரேலியாவைப் போல 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இணையதளங்களைப் பார்க்க ஒன்றிய அரசு தடை விதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை அவசியம் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இணைய பயன்பாடு அதிகரிப்பதால் சிறுவர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், இதனை கட்டுப்படுத்த உரிய சட்ட நடவடிக்கை தேவை என வலியுறுத்தினர். ஆஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை உதாரணமாக எடுத்துக்காட்டினர்.
இத்தகைய தடை அமலுக்கு வரும் வரை, சிறுவர்களிடையே இணையத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!