பிறப்பிட சான்றிதழுக்கு இணையதள விலக்கு!
பிறப்பிட சான்றிதழை இணையதளம் மூலம் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் 25-ம் தேதி வரை இந்த தற்காலிக விலக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில், மண்டல துணை தாசில்தார்கள் மற்றும் தாலுகா துணை தாசில்தார்கள் நேரடியாக கையெழுத்திட்டு பிறப்பிட சான்றிதழ்களை வழங்கலாம். இணையதள சேவையில் ஏற்பட்ட காரணங்களால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!