undefined

ரூ.200 கட்டணத்தில் இன்டர்நெட் சேவை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!  

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. துறை வாரியாக கேள்விகளுக்கு அந்தந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில்  தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் இணைய சேவை வசதி வீடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.


அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும்   100 Mbps வேகத்தில் வெறும் 200 ரூபாய் கட்டணத்தில் இன்டர்நெட் சேவை வழங்கப்பட இருக்கிறது. சுமார் 4700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இன்டர்நெட் சேவை வேண்டும் என ஏற்கனவே  மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.  


அந்த கிராமங்களுக்கு உரிய வசதிகள் இருக்கும் இடங்கள் குறித்து தேர்வு செய்யப்பட்டு பின்னர் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்  மேலும் வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை போல மாதம் ரூ 200 கட்டணத்தில் இணையதள சேவை வழங்கப்படும் என  அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?