அழைப்பிதழ் கொடுக்கச் சென்றபோது சோகம்... பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளை  வேன் மீது மோதி பலி! 

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் பிரசன்ன வெங்கடேஷ், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் ஒரு பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, இன்னும் ஒரு வாரத்தில் அதாவது வரும் 28-ந்தேதி கோலாகலமாகத் திருமணம் நடைபெற இருந்தது. தனது திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் அழைக்க வேண்டும் என்கிற ஆவலுடன், கடந்த சில நாட்களாக அவர் பைக் மூலமாக ஊர் ஊராகச் சென்று அழைப்பிதழ் வழங்கி வந்துள்ளார்.

வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருமண அழைப்பிதழ்களைக் கொடுத்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். உசிலம்பட்டி பேரையூர் சாலையில் பைக் வந்து கொண்டிருந்தபோது, எதிரே மின்னல் வேகத்தில் வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக இவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரசன்ன வெங்கடேஷ் பலத்த காயமடைந்து, தனது திருமணக் கோலத்தைப் பார்க்கும் முன்னே ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொண்டாட்டத்திற்குத் தயாராக இருந்த அந்த வீட்டில், மகனின் பிணத்தைப் பார்த்துப் பெற்றோர் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. விபத்து குறித்துத் தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வேன் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் மணக்கோலம் காண வேண்டிய இளைஞர், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற இடத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்