undefined

ஐபிஎல் 2026: பயிற்சியைத் தொடங்கிய தோனி - வைரலாகும் புகைப்படங்கள்!

 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வரும் தோனி, இந்த ஆண்டும் மஞ்சள் சீருடையில் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தோனி தனது சொந்த ஊரான ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க (JSCA) மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில், தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “யார் பயிற்சி பெறுகிறார்கள் என்று பாருங்கள்” (Look who's training) எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க அதிகாரியும், தோனியின் நீண்டகால நண்பருமான சவுரவ் திவாரியுடன் தோனி ஆலோசனையில் ஈடுபடும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் வேளையில், 44 வயதான தோனி தனது உடற்தகுதியைப் பேணுவதிலும், பேட்டிங் பயிற்சியிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!