ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட்டை காட்டி  மாநகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம்!  

 

சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம்  வெளியிட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ்  போட்டிகளுக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள், போட்டி நடைபெறும் நாளன்று சென்னை மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் தங்களின் அந்தந்தப் போட்டிக்கான அசல் டிக்கெட் அல்லது டிஜிட்டல் டிக்கெட்டைக் காட்டினால் போதும், மைதானத்திற்குச் செல்லவும், போட்டி முடிந்து வீடு திரும்பவும் இந்தப் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ரசிகர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை மெட்ரோ இரயில்களில் ஐபிஎல் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மாநகரப் பேருந்துகளிலும் இந்த வசதி நீட்டிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. போட்டி தொடங்குவதற்கு 3  மணி நேரத்திற்கு முன்னதாகவும், போட்டி முடிந்த பிறகு 3  மணி நேரம் வரையிலும் இந்த இலவசப் பயணச் சலுகை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் சிரமமின்றி மைதானத்திற்கு வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!