நாளை ஐபிஎல் மினி ஏலம்...நடிகர் விஜய் மகன் புகைப்படத்துடன் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவு!
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நாளை (டிசம்பர் 16) அபுதாபியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த ஏலம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரும், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எல். ஏலம் குறித்து அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்தச் சூழலில், அஸ்வின் தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில், நடிகர் விஜய்யின் மகனான 'ஜேசன் சஞ்சய்' புகைப்படத்துடன், 'பல்பு ஹோல்டர்' படத்தின் இணைப்பைச் சேர்த்து, 'என்ன?' என்ற தலைப்புடன், வெறும் இரண்டு கண்கள் மட்டுமே உள்ள எமோஜிகளையும் பதிவிட்டுள்ளார். அஸ்வினின் இந்தக் குழப்பமான பதிவு, ஜேசன் சஞ்சய்க்கும் ஐ.பி.எல். ஏலத்துக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? அல்லது அவர் திரைப்படம் சம்பந்தமான ஏதேனும் தகவலைக் குறிக்கிறாரா? என ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!