ஐபிஎல் லிருந்து ஹர்ஷித் ராணா விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி!
இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா பயிற்சி ஆட்டத்தின் போது முழங்காலில் காயம் அடைந்ததால் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால் வரவிருக்கும் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கொல்கத்தா அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி கோப்பை வெல்ல ஹர்ஷித் ராணா முக்கிய பங்கு வகித்தார். அந்த தொடரில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாக விளையாடிய அவர் பின்னர் இந்திய அணியிலும் இடம்பிடித்தார். அவரது திறமையை கருத்தில் கொண்டு கொல்கத்தா அணி கடந்த ஆண்டு அவரை 4 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துக் கொண்டது.
தற்போது அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மாற்று வீரரை தேர்வு செய்ய அணியின் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கிடையில் காயம் காரணமாக இலங்கை வீரர் பதிரனாவும் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பது குறித்தும் சந்தேகம் நிலவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!