2000 ட்ரோன்கள், 500 ஏவுகணைகள் ... 9 நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மழை.. நடுங்கும் உலக நாடுகள். !
மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடங்கி 19 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட 9 நாடுகள் மீது ஈரான் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பாரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. தனது நாட்டின் முக்கியத் தலைவர்களை அமெரிக்கா கொன்றதற்கும், எண்ணெய் முனையங்கள் அழிக்கப்பட்டதற்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதலை ஈரான் மேற்கொண்டுள்ளது. சுமார் 500 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2,000 ஆளில்லா விமானங்களை ஏவி ஈரான் நடத்திய இந்தத் தாக்குதலால், வளைகுடா பிராந்தியமே போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.
இந்தத் தாக்குதலில் உலகின் மிகப்பெரிய எரிசக்தி மையமான கத்தாரின் ராஸ் லஃபான் மீது 14 ஏவுகணைகள் பாய்ந்ததில் அந்தத் தொழில் நகரம் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளது. இதேபோல், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அங்குள்ள பணியாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓமனில் உள்ள தொழிற்சாலைகள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே போர் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 109 டாலராக உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய தாக்குதல்களால் உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் ஈரான் குறிவைத்துள்ளதால், அமெரிக்கா இதற்கு எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறது என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்தத் தொடர் தாக்குதல்களால் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கக்கூடும் என்பதால், சர்வதேச நாடுகள் மிகுந்த கவலையுடன் இந்த மோதலை உற்றுநோக்கி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!