ஈரானில் எரியும் போராட்டம்… அமெரிக்கா உதவ தயார்... ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி தொடங்கியது. பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார தேக்கநிலை காரணமாக மக்கள் கொந்தளித்துள்ளனர். மாகாணங்கள், நகரங்கள் என பல இடங்களில் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் 2 வாரங்களாக தொடர்ந்து வருகிறது. போராட்டக்காரர்களை அடக்க அரசு பாதுகாப்பு படையினரை இறக்கி உள்ளது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 31 மாகாணங்களில் 100 நகரங்களில் போராட்டம் தீவிரமாகி உள்ளது. பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டதால், ஈரானில் நடப்பது வெளியுலகிற்கு சரிவர தெரியாமல் உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதற்கிடையே, போராட்டங்களில் 116 பேர் உயிரிழந்திருக்கலாம் என அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இல்லாத அளவில் சுதந்திரம் தேடி ஈரானில் மக்கள் போராடுகிறார்கள் என்றும், அவர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என்றும் கூறினார். மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது என எச்சரித்த அவர், மீறினால் ஈரான் மக்களை காக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் ஈரான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், குடியரசு கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாம், ஈரானுக்கு எதிரான கொடூர தாக்குதல்கள் முறியடிக்கப்படும் என கூறியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!