ஈரான் தாக்குதல்… அமெரிக்காவின் 5 டேங்கர் விமானங்கள் சேதம்!
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அமெரிக்க விமானப் படையின் 5 டேங்கர் விமானங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சம்பவம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தகவல் அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
செளதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப் படை தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அந்த தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க விமானப் படையின் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பகுதியளவு சேதமடைந்த விமானங்களை சரிசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
முன்னதாக மேற்கு இராக்கில் அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான டேங்கர் விமானம் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் விமானிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் பல்வேறு போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்புவதற்காக நூற்றுக்கணக்கான டேங்கர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!