undefined

 ஈரான் சிவப்பு கோட்டை தாண்டியது... டிரம்ப் எச்சரிக்கை!

 
 

ஈரான் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டதாகவும், அந்த நாட்டின் நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனை கூறினார்.

ஈரானில் தற்போது ஆட்சி செய்பவர்கள் உண்மையில் தலைவர்களா, அல்லது வன்முறையின் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்களா என்பது தனக்குத் தெரியவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அங்கு நடக்கும் சம்பவங்கள் அமெரிக்க அரசின் கவனத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஈரானில் வன்முறையை கட்டுப்படுத்த இணையதள சேவை முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்குவது குறித்து எலான் மஸ்குடன் பேச உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். ஈரான் நிலைமை குறித்து விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!