சவுதியில் அமெரிக்கப் படைத்தளம் மீது ஈரான் ஏவுகணை வீச்சு: 10 வீரர்கள் படுகாயம்!
மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கப் படைத்தளம் மீது ஈரான் இன்று அதிரடி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கத் துடிக்கும் ஈரான், ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் இந்தப் பயங்கரத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. இந்தத் தாக்குதலில் படைத்தளத்தில் இருந்த 10 அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்; அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே "ஈரான் அழிக்கப்பட்டது" என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது. படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிநவீன போர் விமானங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள் இந்தத் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளன. இதே தளத்தில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி ஈரான் நடத்திய தாக்குதலில், பெஞ்சமின் பென்னிங்டன் (26) என்ற அமெரிக்க வீரர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஒருமுறை ஈரான் தனது பலத்தைக் காட்டியிருப்பது அமெரிக்கத் தரப்பை அதிர வைத்துள்ளது.
இந்தத் திடீர் தாக்குதலால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், உலக நாடுகள் அனைத்தும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளன. "அமைதித் தூதுவராக இருக்க விரும்புகிறேன்" என டிரம்ப் ஒருபுறம் கூறி வந்தாலும், ஈரானின் இந்தத் தொடர் தாக்குதல்கள் மேற்காசியப் பகுதியில் போரை இன்னும் தீவிரமாக்கியுள்ளன. காயமடைந்த வீரர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்கா அடுத்தக்கட்டமாக என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு உலகளவில் எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!