5வது நாளாக தாக்குதல் தீவிரம்… ஈரான்–இஸ்ரேல் பதற்றம் உச்சம்!
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் தாக்குதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. ‘ரோரிங் லயன்’, ‘எபிக் ஃப்யூரி’ என்ற பெயரில் நடவடிக்கை நடைபெறுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் பறந்து ஏவுகணை தளங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை தாக்கியதாக தகவல். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் வெடிப்பு சத்தம் கேட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் பல ரகசிய இடங்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு கூறியுள்ளது. அணு திட்டத்துடன் தொடர்புடைய ரகசிய மையமும் துல்லியத் தாக்குதலில் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஈரானின் அணு முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வளைகுடா கடற்பகுதிகளிலும் கடுமையான இராணுவ கண்காணிப்பு நடைபெறுகிறது.
அமெரிக்க தளபதி பிராட் கூப்பர், ஆயிரக்கணக்கான இலக்குகள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். விமான பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்கள் பெருமளவு அழிந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஈரானின் பதிலடி தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியானதாகவும் தகவல். மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்து பெரிய போராக மாறுமா என்ற கவலை உலக நாடுகளில் நிலவுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!