ட்ரம்புக்கு ஈரான் கடும் எச்சரிக்கை… மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் அத்துமீறி நடந்தால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதாக கூறி, பல நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இதன் காரணமாக ஈரான் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து, வேலைவாய்ப்பின்மை உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் வாழ்க்கை கடினமாகியுள்ளது.
ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு ஈரான் மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பாகவே ஈரான் தரப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரான்–அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமானால், மத்திய கிழக்கு பகுதியில் பெரிய போர் சூழல் உருவாகலாம் என உலக நாடுகள் கவலையுடன் கண்காணித்து வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!