undefined

சரணடையுங்கள்... ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை! 

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது பெரிய ராணுவத் தாக்குதல் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 28 அதிகாலை தொடங்கிய தாக்குதலில் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களில் வெடிச்சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது. ஈரானின் அச்சுறுத்தலை அகற்றுவதே நோக்கம் என தெரிவித்துள்ளது. அமெரிக்காவும் நேரடியாக பங்கேற்றதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட காணொளியில் முக்கிய அறிவிப்பு இடம்பெற்றது. ஈரானில் பெரிய ராணுவ நடவடிக்கை தொடங்கியதாக அவர் கூறினார். ஏவுகணை உற்பத்தி மையங்களையும் கடற்படை திறனையும் தகர்ப்பதே இலக்கு என்றார். ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்கமாட்டோம் என வலியுறுத்தினார். அமெரிக்க மக்களின் பாதுகாப்பே முதன்மை என்றார்.

இஸ்லாமிய புரட்சிகர காவல் படைக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆயுதம் இட்டுவிட்டால் மரியாதை எனவும், இல்லையெனில் கடுமையான விளைவுகள் எனவும் கூறப்பட்டது. தெஹ்ரான், இஸ்பஹான், கோம் உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதிலடி முயற்சிகளும் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!