undefined

ஈரான் - அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை? புதிய கோரிக்கை தகவல்!

 

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு நிறுத்தப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க ஈரான் பாதுகாப்புத் தரப்பில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓமன் வழித்தடத்தின் மூலம் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடர விருப்பம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இந்த முயற்சியை முன்னெடுத்ததாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டியில், ஈரான் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை கோரிக்கை வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் முன்பே இதை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக நிலைமை தீவிரமடைந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தொடர்ந்தும் அந்தப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!