undefined

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி உறுதி... அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை !

 

 

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அனைத்து அமெரிக்க சொத்துக்களையும் குறிவைப்போம் என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்-க்கு அதிகாரப்பூர்வ கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளோம் என்றும், அதன் விளைவுகளுக்கு அமெரிக்காவே பொறுப்பு என்றும் ஈரான் தெளிவாக தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்கா-வுக்கு நேரடி சவால் விடுக்கப்பட்டுள்ளது. போர் மூண்டால் கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தனது இறையாண்மையை காக்க எந்த அளவுக்கும் செல்ல தயாராக இருப்பதாக ஈரான் வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் இதனால் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஈரான் ரஷ்யா-வுடன் இணைந்து ஓமன் வளைகுடாவில் கடற்படை பயிற்சி நடத்தியுள்ளது. மறுபுறம் அமெரிக்கா அரபிக்கடலில் போர்க்கப்பல்களை நிறுத்தி, அதிநவீன போர் விமானங்களையும் மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது. இரு தரப்பின் இராணுவ நகர்வுகளால் பிராந்தியத்தில் போர் அச்சம் அதிகரித்துள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!