undefined

 அமெரிக்க உத்தரவுக்கு பணியவில்லை எனில் ஈரான் தலைவர் மகனுக்கு  கொலை செய்ய திட்டம்? பகீர் தகவல்! 

 

அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஈரான் இணங்கவில்லை என்றால், ஈரானின் உயர் தலைவர் Ali Khamenei மற்றும் அவரது மகன் மொஜ்தபாவை குறிவைக்கும் திட்டம் தயாராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் Donald Trump-க்கு முன்பே ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அலி காமெனிக்கு பிறகு மொஜ்தபா உயர் தலைவர் பொறுப்பேற்கலாம் என்ற சூழலில், அவரையும் கொலைப் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமெரிக்கா மத்திய கிழக்கில் இராணுவக் கப்பல் படையை அதிகரித்து வருவது பதற்றத்தை மேலும் தூண்டியுள்ளது.

ஈரானின் அணு திட்டத்தைச் சுற்றி இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இராஜதந்திர தீர்வுக்கான நம்பிக்கை குறைந்து வருவதாகவும், இராணுவ மோதலுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும், அமெரிக்காவின் இறுதி முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!