undefined

அமெரிக்கா ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார்... இந்தோனேஷியா... ! 

 

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உருவான பதற்றத்தை குறைக்க மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக இந்தோனேசிய அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அறிவித்துள்ளார். சனிக்கிழமை காலை தெஹ்ரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நிலைமை பதற்றமடைந்துள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பாதுகாப்பு சூழல் சீர்குலைந்துள்ளது.

தாக்குதலுக்கு பதிலடியாக, பஹ்ரைன், குவைத், கத்தார், சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல் விரிவடைந்தால் பெரியளவிலான போராக மாறும் அபாயம் உள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில், அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை நாட வேண்டும் என இந்தோனேசிய அரசு வலியுறுத்தியுள்ளது. இருதரப்பும் ஒப்புக்கொண்டால் மத்தியஸ்தம் செய்ய தெஹ்ரான் பயணம் செய்யத் தயார் என அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 2025ஆம் ஆண்டு இஸ்ரேல்–ஈரான் மோதலில் பலர் உயிரிழந்தது நினைவுகூரப்படுகிறது. தற்போதைய நிலைமைக்கு அமைதியான தீர்வு காண உலக நாடுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!