ஈரான்–இஸ்ரேல் போர்... 10 நாட்களில் 1,255 பேர் உயிரிழப்பு !
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் 10 நாட்களை எட்டியுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து ஈரான் அரசு தகவல் வெளியிட்டுள்ளது. ஈரான் துணை சுகாதார அமைச்சர் அலி ஜஃபாரியான் அளித்த பேட்டியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் இதுவரை 1,255 பேர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளார். இதில் 200 குழந்தைகள் மற்றும் 11 சுகாதார பணியாளர்கள் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 12,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் தீப்பற்றியதால் ஏற்பட்ட எரிபுண்கள் மற்றும் இடிபாடுகளில் சிக்கியதால் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்களால் 29 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன. இதில் 10 மருத்துவமனைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. 52 சுகாதார மையங்கள், 18 அவசர சிகிச்சை மையங்கள் மற்றும் 15 ஆம்புலன்ஸ்களும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இஸ்ரேல், ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதா
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!