அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்… 45 ஈரான் மாலுமிகள் உடல் ஒப்படைப்பு!
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் உயிரிழந்த 45 ஈரான் மாலுமிகளின் உடல்களை இலங்கை அரசு ஈரான் தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளது. இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு ‘ஐரிஸ் டெனா’ கப்பலில் ஈரான் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் கடந்த மார்ச் 4 அன்று இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடந்தபோது கப்பலில் இருந்த சுமார் 180 பேர் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது. உதவி கோரிய நிலையில் இலங்கை கடற்படையினர் விரைந்து சென்று 32 மாலுமிகளை உயிருடன் மீட்டனர். இதுவரை 84 பேரின் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் 45 பேரின் உடல்கள் மத்தளா சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். போர் நிலைமை காரணமாக உடல்களை தற்காலிகமாக இலங்கையில் வைத்திருந்ததாகவும், பின்னர் தாய்நாட்டிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர் பிழைத்த மாலுமிகள் தற்போது கோகல்லே விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!