படுகாயம் அடைந்து ரகசிய படை பாதுகாப்பில் ஈரான் தலைவர்… அமெரிக்கா அதிர்ச்சி தகவல்கள்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காயமடைந்ததாக கூறப்படும் ஈரானின் புதிய தலைவரான மோஜ்தபா கமேனியைப் பாதுகாப்பதற்காக ரகசியப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அணு ஆயுதக் கொள்கையை கைவிட வேண்டும் என்ற விவகாரத்தில் தொடங்கிய பதற்றம் போராக மாறிய நிலையில், கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவரும் மதகுருவுமான அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தாக்குதல்கள் தொடர்கின்றன. ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமாக உள்ள கார்க் தீவில் அமைந்த ராணுவத் தளங்களை அமெரிக்க ராணுவம் முழுமையாக அழித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேசமயம் புதிய தலைவரான மோஜ்தபா கமேனி தாக்குதலில் கடுமையாக காயமடைந்து ஒரு காலை இழந்ததாகவும், அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
மோஜ்தபா கமேனியை பாதுகாக்க ‘நோபோ’ எனப்படும் ரகசியப் பாதுகாப்புக் குழு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பிரிவு தலைமை மதகுருவின் பாதுகாப்புக்காகவே செயல்படுகிறது. ஈரானில் ராணுவத்துடன் சேர்ந்து செயல்படும் இஸ்லாமிய புரட்சிக்கரப் படை மற்றும் அதன் அமைப்புகள் தற்போது போர் சூழலில் முக்கிய பங்காற்றி வருகின்றன
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!