நாணயத்தில் டிரம்ப் முகம்.... அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தில் புதிய சர்ச்சை!
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிபர் டொனால்ட் டிரம்பின் உருவம் பொறித்த 24 காரட் தங்க நாணயத்தை வெளியிட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் அதிபர் டிரம்ப் மேசை மீது சாய்ந்து கம்பீரமாக நிற்பது போன்ற உருவமும், மறுபக்கத்தில் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ முத்திரையான கழுகுச் சின்னமும் இடம் பெற்றுள்ளன. இது பொதுப் பயன்பாட்டிற்கான நாணயம் அல்ல என்றும், ஒரு நினைவுப் பொருளாக (Souvenir) மட்டுமே வெளியிடப்பட உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே அமெரிக்காவில் பெரும் அரசியல் புயல் வீசத் தொடங்கியுள்ளது. பொதுவாக அமெரிக்க மரபுப்படி, உயிருடன் இருக்கும் அதிபர்களின் உருவத்தை நாணயங்களிலோ அல்லது தபால் தலைகளிலோ பொறிப்பதில்லை என்ற நீண்டகால மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அந்த மரபை உடைக்கும் வகையில் டிரம்ப் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதால், இது சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
இது ஒரு வகையான 'தனிநபர் வழிபாடு' எனவும், இனி வரும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்ட ஒரு விளம்பர யுக்தி என்றும் ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே சமயம், "வரலாற்றுச் சிறப்புமிக்க 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இது ஒரு சிறந்த வழி" என டிரம்ப் ஆதரவாளர்கள் இதனை நியாயப்படுத்தி வருகின்றனர். கோல்டு காயின் விவகாரம் தற்போது வெள்ளை மாளிகை வட்டாரத்தில் அனலைப் பறக்க வைத்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!