"ஈரான் ஆட்டத்தை அடக்குவோம்!"... ட்ரம்ப் சபதம்... வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்!
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரானின் அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், "ஈரான் நீண்டகாலமாக உலக நாடுகளுக்கும், குறிப்பாக அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அவர்களின் அணு ஆயுதக் கனவு ஒருபோதும் நனவாகாது. ஈரானின் ஆட்டத்தை அடக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா எடுக்கும்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் மட்டுமின்றி, தேவைப்பட்டால் ராணுவ ரீதியான நடவடிக்கைகளுக்கும் தயங்கமாட்டோம் என அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.சமீபகாலமாக ஈரான் - அமெரிக்கா இடையே நிலவி வரும் மோதல் போக்கு, ட்ரம்ப் மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு மேலும் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, ஈரானால் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் மற்றும் ஈரானின் ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவை அதிருப்தி அடையச் செய்துள்ளன.
ட்ரம்ப்பின் இந்த அதிரடிப் பேச்சால் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் அமைதி காக்குமாறு வலியுறுத்தியுள்ளன. "அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணிய மாட்டோம்" என ஈரான் தரப்பும் பதிலடி கொடுத்து வருவதால், சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!