ஹார்முஸ் நீரிணை விவகாரம் ... அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் இனி கட்டணம்... ஈரானின் அடுத்த செக்!
மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தற்போது தனது எல்லையை ஒட்டிய கடல் வழிப் பாதையை அதிரடியாக மூடியுள்ளது. உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் கால் பகுதி விநியோகம் செய்யப்படும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால் சர்வதேச சந்தையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து அந்த நாடுகளின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து வருகிறது.
கடந்த இருபத்தி ஆறு நாட்களாக நீடித்து வரும் இந்தப் போரில் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை நிறுத்தப் பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாகத் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவத்திற்குப் பழிதீர்க்கும் விதமாகவே ஈரான் இந்தத் தடையை விதித்துள்ளது. தற்போது கடல் வழிப் போக்குவரத்து முடங்கியுள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் எரிபொருளுக்காக மற்ற வழிகளைத் தேட வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையே ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் இனி கட்டணம் வசூலிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது. ஒரு நாட்டின் கடல் எல்லை வழியாகப் பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது அதற்குக் கட்டணம் வசூலிப்பது இயல்பான நடைமுறைதான் என ஈரான் நாடாளுமன்ற வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. இந்தச் சட்ட மசோதா விரைவில் அமலுக்கு வரவுள்ள நிலையில் இது சர்வதேச வர்த்தகத்தில் மேலும் பல சிக்கல்களை உருவாக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!