போர் விமானத்தில் இருந்து குதித்த அமெரிக்க விமானியைப் பிடித்தால் பரிசு: ஈரான் அதிரடி அறிவிப்பு!

 

 

தெஹ்ரான்: ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்துத் தப்பிய விமானியைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பெரும் பரிசு வழங்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்டு ராணுவ வட்டார்ங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாராசூட் மூலம் தப்பிய அமெரிக்க விமானி ஈரானின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் பதுங்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அவரைப் பற்றித் துல்லியமான தகவல் கொடுப்பவர்களுக்கு அல்லது உயிருடன் பிடித்துத் தருபவர்களுக்குப் பணமுடிப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் எப்-35 ரக போர் விமானத்தை ஈரானியப் படைகள் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாகச் செய்திகள் வெளியாகின. அந்தச் சம்பவத்தின்போது விமானத்திலிருந்து வெளியேறிய இரண்டு அமெரிக்க வீரர்களில் ஒருவர் ஏற்கனவே பிடிபட்டதாகக் கூறப்படும் நிலையில், மற்றொருவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஈரானிய எல்லைப் பகுதிகளில் உள்ள மக்களுக்குப் புகைப்படங்கள் மற்றும் அடையாளங்கள் வழங்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மறுபுறம், அமெரிக்கத் தரப்பில் தங்களது வீரர்களை மீட்கும் முயற்சிகள் ரகசியமாகத் தொடர்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இந்தப் பரிசு அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. பிடிபடாத அந்த அமெரிக்க விமானி ஒருவேளை ஈரானியப் படைகளிடம் சிக்கினால், அது அமெரிக்க அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமையும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!