ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் மீண்டும் குண்டுமழை: கார்க் தீவு தரைமட்டம்; போர் மேகங்களால் உலக நாடுகள் நடுக்கம்!
ஈரான் நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகக் கருதப்படும் கார்க் தீவு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இன்று அதிரடியாகப் போர் விமானங்களை அனுப்பி குண்டுமழை பொழிந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த இறுதி காலக்கெடுவை ஈரான் அலட்சியப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து விட மறுத்து ஈரான் பிடிவாதம் காட்டியதே இந்தத் துணிகரத் தாக்குதலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த பயங்கரத் தாக்குதலில் கார்க் தீவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி முனையங்கள் பெரும் சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலுமாக முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால், அந்தத் தீவு முழுவதுமே கரும்புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் அடுத்த கட்டத்தை எட்டி பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆத்திரமடைந்துள்ள ஈரான், இதற்குப் பழிவாங்கும் விதமாகப் மிகப்பெரியத் தாக்குதலை நடத்தத் தயாராகி வருவதாக அச்சுறுத்தி உள்ளது. ஒருபுறம் உச்ச தலைவர் கோமாவில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மறுபுறம் நாட்டின் முக்கியப் பகுதிகள் தாக்கப்படுவது ஈரான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பிலும் மோதல் வலுத்து வருவதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலகப் பொருளாதாரமே நிலைகுலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!