இந்திய மாலுமிகளுக்கு அவசர எச்சரிக்கை: ஈரான் ராணுவ தளங்கள் அருகே போகாதீங்க!  

 

 

ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடத்தி வரும் போரினால் வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. சுமார் 40 நாட்களாக நீடித்த இந்த மோதலில் ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்ட நிலையில், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில், ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

allowfullscreen

இந்த இக்கட்டான சூழ்நிலையில், தற்காலிகமாக இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஈரானில் தங்கியுள்ள மற்றும் அங்குள்ள கப்பல்களில் பணியாற்றும் இந்திய மாலுமிகளுக்கு இந்தியக் கப்பல் போக்குவரத்து கழகம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இந்திய மாலுமிகள் யாரும் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி மையங்கள் அல்லது ராணுவ தளங்களுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போர் மேகங்கள் இன்னும் முழுமையாக விலகாத நிலையில், பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கப்பல்களில் உள்ள மாலுமிகள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து கப்பல்களிலேயே தங்குமாறும், பாதுகாப்பு விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஈரானில் உள்ள முக்கிய சிவில் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா குறிவைக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இந்த அசாதாரண சூழலை இந்திய வெளியுறவுத் துறையும், கப்பல் போக்குவரத்து அமைச்சகமும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!