இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் புராதன சின்னங்கள் சேதம்… !
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் பிப்ரவரி 28ம் தேதி தொடங்கியது. இந்த தாக்குதலில் ராணுவ தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் பல சேதமடைந்தன. அத்துடன் நாட்டின் வரலாறையும் கலாச்சாரத்தையும் காட்டும் பல புராதன இடங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐநா விதிகளை மீறி கோலெஸ்தான் அரண்மனை, செகல் சோடோன் அரண்மனை மற்றும் இ-ஜமே மசூதி ஆகிய முக்கிய வரலாற்று சின்னங்களும் தாக்குதலில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. நூற்றாண்டுகளைக் கடந்த இந்த கட்டிடங்கள் ஈரானின் பழமையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் முக்கிய இடங்களாக கருதப்படுகின்றன. அவற்றுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் கொரம்மாபாத் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பல கட்டிடங்களும் குகைகளும் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்கள் பழமையான மனித வாழ்வின் அடையாளங்களை தன்னகத்தே கொண்டவை என கூறப்படுகிறது. தொடரும் போரின் காரணமாக ஈரானின் பல வரலாற்று சின்னங்கள் ஆபத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!