ஈரான் கடற்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் பலி?!
மேற்காசியாவில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் ஈரான் நாட்டின் முக்கிய ராணுவ தளபதி அலிரெசா தங்சிரி மர்மமான முறையில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பந்தர் அப்பாஸ் என்ற இடத்தில் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலில் அவர் பலியாகிவிட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹார்மூஸ் ஜலசந்தி எனப்படும் கடல் வழிப் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த முக்கியத் தளபதியின் மரணம் குறித்து ஈரானோ அல்லது இஸ்ரேலோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தற்போது ஏவுகணைகளை ஏவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐந்து நாட்களுக்குப் போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதாகவும் ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் ஈரானோ அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனத் தொடர்ந்து மறுத்து வருவதால் சர்வதேச அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
மறுபுறம் ஈரான் ராணுவம் தனது நவீன ரக டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு தரப்பும் மாறி மாறித் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் வளைகுடா நாடுகளில் அமைதி திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்காவின் போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை ஈரானும் இஸ்ரேலும் கண்டுகொள்ளாமல் தாக்குதலைத் தொடர்வதால் அந்தப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் வலுவடைந்து வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!