ஈரான் பள்ளி தாக்குதல்… பலியான மாணவர் குடும்பங்களுக்கு சீனா நிதி உதவி
ஈரானில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. ஈரான் தெற்கு பகுதியில் உள்ள மினாப் நகரில் அமைந்த பெண்கள் தொடக்கப் பள்ளி மீது மார்ச் 1 அன்று நடந்த தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அந்த பகுதியில் தாக்குதல் நடத்தியது குறித்து தங்களுக்கு தகவல் இல்லை என்று இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து சீனா நிவாரண உதவி அறிவித்துள்ளது. தாக்குதலில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி 84 லட்சம் நிதி வழங்கப்படும் என்று சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் பள்ளிகள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச மனித உரிமை விதிகளை மீறுவது என்றும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!