இரட்டைக் கொலை செய்வது தான் திமுக ஆட்சியின் லட்சணமா? இபிஎஸ் ஆவேசம்!
பணம், நகைக்காக தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். திருப்பூர் பல்லடம் அருகே இதே பண்ணை வீட்டில் 3 பேர் கொலை செய்யபட்டதை அடுத்து அதே போன்ற இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளரும் இபிஎஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் ” ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, “சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என பெருமை பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா? திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!