undefined

இரண்டாக உடைகிறதா தவெக?! ஆனந்த் Vs ஆதவ்: வெடித்த கோஷ்டி மோதல்கள்!

 

நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக), முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு இடையே கடும் அதிகார மோதல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் நிலவும் இந்தக் கோஷ்டிப் பூசலால், தவெக இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

தவெக கட்சிக்குள் புஸ்ஸி ஆனந்தின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், அதுவே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாகச் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்டச் செயலாளர்கள் புறக்கணிப்பு:

புதுச்சேரியில் நடந்த விஜய் நிகழ்ச்சிக்காக அழைத்தபோது, பல மாவட்டச் செயலாளர்கள் ஆதவ் அர்ஜூனாவின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை என்றும், அவர்கள் புஸ்ஸி ஆனந்தை மட்டுமே தொடர்பு கொள்கிறார்கள் என்றும் புகார் எழுந்துள்ளது.

அதிகார வரம்பு:

ஆதவ் அர்ஜூனா அறிவுறுத்தல்கள் கொடுத்தாலும், பல மாவட்டச் செயலாளர்கள் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கேட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

படம் பயன்படுத்தத் தடை:

திருவள்ளூரில் தவெக பேனரில் ஆதவ் அர்ஜூனாவின் படத்தை வைத்ததாகக் கூறி, வட்டச் செயலாளர் பிரதீப் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் படங்களைத் தவிர, மற்றவர்களின் படங்களைப் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் தவெகவின் மற்றொரு முக்கிய நிர்வாகியான அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த் மீது நேரடியாகப் பல புகார்களைத் தெரிவித்துள்ளார். புதுச்சேரி கூட்டத்திற்குச் சென்றபோது, தனக்கு அனுமதிச் சீட்டுக் கிடைக்கவில்லை என்றும், மைதானத்திற்கு வெளியே இருந்து புஸ்ஸி ஆனந்தை தொலைபேசியில் அழைத்தும் அவர் தனது அழைப்பை ஏற்கவில்லை என்றும் அருண்ராஜ் வேதனை தெரிவித்துள்ளார். “விஜய் சாருடன் நாள்தோறும் பேசி செயல்படும் எனக்கே இந்த நிலைமையா?” என்று அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளதால், கட்சிக்குள் உள்ள பிளவு வெளிப்படையாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!