"முதல்வரின் மனது கல்லால் ஆனதா?" - வானதி சீனிவாசன் ஆவேசம்!
பணி நிரந்தரம் செய்யக் கோரி போராடி வந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் என்பவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மௌனத்தைக் கண்டித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"கடந்த தேர்தலின் போது பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சியில் அமர்ந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது ஏன்? உலகத்தமிழர்கள் பொங்கல் திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் வேளையில், ஆசிரியர்களும் தூய்மைப்பணியாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகத் தெருவில் நின்று போராடுவது தான் திராவிட மாடல் ஆட்சியா?"
"திமுக அரசின் அலட்சியத்தால் உயிரிழந்த ஆசிரியர் கண்ணனுக்கு ஒரு இரங்கல் செய்தி கூட வெளியிட மனமில்லாத முதலமைச்சரின் மனது கல்லால் ஆனதா?" என அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாகப் பகுதிநேர ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துச் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பங்கேற்றிருந்த கண்ணன், அரசின் பாராமுகத்தால் மனமுடைந்து விஷமருந்தியதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!