undefined

மகளிருக்கு வழங்கப்பட்ட ரூ.5,000 ஆதி திராவிடர் நலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியா? தமிழக அரசு விளக்கம்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு மிகப்பெரிய நிதிப் பரிமாற்றத்தை அரசு மேற்கொண்டுள்ளது.

சில ஊடகங்களில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (KMUT) திட்டத்தின் கீழ் ரூ.5,000 வழங்குவதற்காக மாற்றி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதும் ஆதாரமற்றது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்த ரூ.5,000 என்பது ஒரே மாதத்திற்கான தொகை அல்ல. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மாதாந்திர உரிமைத் தொகை (தலா ரூ.1,000) முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. தவிர, கோடைக் காலச் செலவுகளைச் சமாளிக்கக் கூடுதலாக ரூ.2,000 சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் ரூ.5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால், உரிமைத் தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்படலாம் அல்லது எதிர்க்கட்சிகள் இதைத் தடுக்க முயலலாம் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார். "தேர்தலைச் சாக்குக் காட்டி பெண்களின் உரிமையைத் தடுக்கச் சிலர் முயன்றனர், அதை முறியடிக்கவே இந்த முன்பணம்" என்று அவர் தனது வீடியோ செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இந்த அதிரடி அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

"தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே அரசு இத்தகைய கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது வாக்காளர்களைக் கவரும் முயற்சி" என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். தவெக தலைவர் விஜய், "திடீரென கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பு என ரூ.2,000 அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? இது மக்கள் மத்தியில் எழுந்துள்ள மாற்றத்திற்கான அலையைக் கண்டு அரசு அஞ்சுவதைக் காட்டுகிறது" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாக, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கான மாதாந்திர உரிமைத் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!