undefined

முட்டையில் புற்றுநோய் உண்டாக்கும் நச்சு இருக்கா?! - கர்நாடக அரசு அறிக்கை

 

கர்நாடகாவில் விற்கப்படும் கோழி முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு இருப்பதாகப் பரவிய செய்தியால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சத்தைப் போக்க, கர்நாடக சுகாதாரத்துறை அதிரடி ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில், ஒரு முன்னணி நிறுவனத்தின் கோழி முட்டைகளில் 'நைட்ரோபியூரான்' (Nitrofuran) எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் மருந்து இருப்பதாகத் தகவல்கள் பரவின. இது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் இடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியது. மக்களின் அச்சத்தைத் தீர்க்க முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அரசு உத்தரவிட்டது. இதன்படி, கர்நாடக சுகாதாரத்துறை பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தது:

பெங்களூரு, மைசூரு, மண்டியா, சிவமொக்கா, பல்லாரி உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் முட்டை மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் அனைத்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. தீவிர ஆய்வுக்குப் பிறகு வெளியான முடிவுகளில், முட்டைகளில் எவ்விதமான புற்றுநோய் காரணி ரசாயனங்களோ அல்லது நச்சுத்தன்மையோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், "முட்டையில் நச்சு இருப்பதாகப் பரவிய தகவலால் மக்கள் மிகுந்த ஆதங்கமடைந்தனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநிலம் தழுவிய அளவில் சோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது வந்துள்ள ஆய்வு முடிவுகளின்படி, முட்டையில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு எதுவும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி முட்டைகளைச் சாப்பிடலாம்; அது முற்றிலும் பாதுகாப்பானது."

ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், புரதச்சத்து நிறைந்த முட்டையைத் தைரியமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!