undefined

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்?!

 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது குறித்த பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா விளக்கமளித்துள்ளார். 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து கவுதம் கம்பீர் மாற்றப்படலாம் என்ற செய்திகள் வெறும் வதந்திகளே என்று பிசிசிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. முன்னதாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் 0-3 என இழந்திருந்தது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் சொந்த மண்ணில் இந்தியா சந்தித்த இந்தத் தொடர் தோல்விகளால், டெஸ்ட் போட்டிக்கு மட்டும் பிரத்யேகமாகப் புதிய பயிற்சியாளர் (Split Coaching) நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் பரவின. முன்னாள் ஜாம்பவான் வி.வி.எஸ்.லட்சுமணனை இதற்காக பிசிசிஐ அணுகியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்திகள் குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்: "டெஸ்ட் பயிற்சியாளரை மாற்றுவது குறித்து எந்தவித ஆலோசனையும் நடைபெறவில்லை. பரவி வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை மற்றும் யூகத்தின் அடிப்படையிலானவை. கவுதம் கம்பீரின் ஒப்பந்தம் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை உள்ளது. அவர் தனது ஒப்பந்தப்படி பணியைத் தொடர்வார்."

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (ODI & T20) கம்பீரின் கீழ் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட வெற்றிகளைப் பெற்றுள்ளதால், அவர் மீது வாரியம் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. டெஸ்ட் போட்டிகளில் சரிவைச் சந்தித்துள்ள கம்பீருக்கு, வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை மிக முக்கியமான சவாலாக இருக்கும். மேலும், 2026 ஆகஸ்டில் இலங்கை மற்றும் அக்டோபரில் நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடர்கள் அவரது பயிற்சியாளர் திறமைக்கு மிகப்பெரிய சோதனையாக அமையும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!